2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 767 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 767 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது.
வேலூர்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரத்து 91 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடந்தது.
ஆண், பெண் காவலர்களுக்கு தனித்தனியாக 2 கட்டங்களாக உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் 1,500 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல், குண்டு எறிதல் ஆகியவை நடத்தப்பட்டன. இதில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 577 ஆண்கள், 190 பெண்கள் என மொத்தம் 767 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்படி அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் நேற்று 767 பேருக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மேற்பார்வையில் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன், கைரேகைப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் மற்றும் போலீசார் பிறப்பு, கல்வி, இருப்பிடம், வழக்குகள் எதுவும் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் சரி பார்த்தனர். மேலும் அந்த சான்றிதழ்களின் நகல்களை பெற்று கொண்டனர். தொடர்ந்து அவர்களின் கைரேகைகளும் ஆய்வு ெசய்யப்பட்டது.
767 பேருக்கும் ஒரேநாளில் சான்றிதழ் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முடிவடையாவிட்டால் நாளை (அதாவது இன்று) 2-வது நாளாக சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story