வேடசந்தூர் அருகே குளத்தில் மண் அள்ளும் கும்பல்


வேடசந்தூர் அருகே குளத்தில் மண் அள்ளும் கும்பல்
x
தினத்தந்தி 13 Feb 2020 3:30 AM IST (Updated: 12 Feb 2020 8:33 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே மல்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மரியமங்கலபுரத்தில் இலந்தைகுளம் உள்ளது.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே மல்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மரியமங்கலபுரத்தில் இலந்தைகுளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை அள்ளி, இரவு நேரத்தில் டிராக்டர் மூலம் ஒரு கும்பல் கொண்டு செல்கின்றனர்.

இலந்தைகுளத்தில் தொடர்ந்து மண் அள்ளப்பட்டு வருவதால், பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. எனவே குளத்தில் மண் அள்ளும் கும்பலை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story