நெல்லை சிந்துபூந்துறையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் மாநகராட்சி ஆணையாளரிடம், பொதுமக்கள் மனு


நெல்லை சிந்துபூந்துறையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் மாநகராட்சி ஆணையாளரிடம், பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 13 Feb 2020 4:00 AM IST (Updated: 12 Feb 2020 8:49 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை சிந்துபூந்துறையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள், மாநகராட்சி ஆணையாளரிடம் வலியுறுத்தினர்.

நெல்லை, 

நெல்லை சிந்துபூந்துறையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள், மாநகராட்சி ஆணையாளரிடம் வலியுறுத்தினர்.

மாநகராட்சியில் மனு 

நெல்லை சிந்துபூந்துறை காமராஜர் தெருவை சேர்ந்த நாட்டாமை சுடலையாண்டி, தே.மு.தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி, பலவேசம், தமிழரசி, பொன்.தங்கராஜ் உள்ளிட்டோர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் ஆணையாளர் கண்ணனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

அடிப்படை வசதிகள் 

நெல்லை மாநகராட்சியால் வழங்கப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதால், பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. பலமுறை இவ்வாறு ஏற்படுவதும், அதை தற்காலிகமாக சரி செய்வதுமாக இருந்த நிலையில் தற்போது நிரந்தரமாக சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இங்கு ஒரு பகுதியில் கழிவுநீர் ஓடையில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டம் எங்கள் தெருவுக்கு விஸ்தரிக்கப்படாமல் உள்ளது. பாதாள சாக்கடை குழாய் பதித்தால் கழிவுநீர் கால்வாயில் ஓடுவது தடுக்கப்படும். எங்கள் தெரு மட்டுமல்லாமல், சிந்துபூந்துறை கிழக்கு பகுதியிலும், ஆற்றுக்கு செல்லும் ரோட்டிலும் புதிய குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் சரியாக மூடப்படாமலும், சாலை சரி செய்யப்படாமலும் உள்ளது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே சுகாதார சீர்கேட்டை தடுக்கவும், சாலைகளை உடனடியாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story