ரூ.2¾ கோடி நலத்திட்ட உதவிகள் ; கலெக்டர் வழங்கினார்


ரூ.2¾ கோடி நலத்திட்ட உதவிகள் ; கலெக்டர்  வழங்கினார்
x
தினத்தந்தி 13 Feb 2020 3:45 AM IST (Updated: 12 Feb 2020 9:16 PM IST)
t-max-icont-min-icon

சிறப்பு மனுநீதி நாள் முகாமில் ரூ.2¾ கோடி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

குடியாத்தம், 

குடியாத்தம் வட்டம் பரதராமியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. உதவி கலெக்டர் (பொறுப்பு) தினகரன் வரவேற்றார். சமூக பாதுகாப்பு துறை துணை கலெக்டர் காமராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபிஇந்திரா, கால்நடை துறை இணை இயக்குனர் நவநீதகிரு‌‌ஷ்ணன், பொது சுகாதார துணை இயக்குனர் சுரே‌‌ஷ், மாவட்ட சமூக நல அலுவலர் முருகே‌‌ஷ்வரி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி, வேளாண்மை உதவி இயக்குனர் சங்கர், தாட்கோ மேலாளர் பிரேமா ஆகியோர் திட்ட விளக்க உரை ஆற்றினர்.

அ.தி.மு.க.எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன், வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரமே‌‌ஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் ஆ.சண்முகசுந்தரம் தலைமை தாங்கி, 199 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பிலான மகளிர் சுயஉதவி குழுவினருக்கு வங்கி கடன் உதவி, விவசாயிகளுக்கு மானியத்துடன் எந்திரங்கள், பெண்களுக்கு தையல் எந்திரங்கள், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, துணை தாசில்தார் தேவி, வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், கூட்டுறவு வங்கி நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தாசில்தார் வத்சலா நன்றி கூறினார்.

Next Story