மாவட்ட செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Woman commits suicide by 3 months of marriage

திருமணமான 3 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 3 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
அரக்கோணம் அருகே திருமணமான 3 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரக்கோணம், 

அரக்கோணத்தை அடுத்த நாகவேடு புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆரிப் முகமது (வயது 25), சென்னையில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அரக்கோணத்தை சேர்ந்த காஜா மொய்தீன் என்பவரது மகள் ஹாஜிரா (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹாஜிரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஹாஜிராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ஹாஜிராவின் தந்தை காஜா மொய்தீன் அரக்கோணம் தாலுகா போலீசில், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் மனு கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ஹாஜிராவுக்கு திருமணமாகி 3 மாதமே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேன்கனிக்கோட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
தேன்கனிக்கோட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
2. மாமியாருடன் தகராறில் விபரீத முடிவு 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி
மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமான 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய், தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. போலீசார் மிரட்டியதால் தற்கொலை: ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு
போலீசார் மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
4. பேச்சிப்பாறை கூட்டுறவு சங்க தலைவர் விஷம் குடித்து தற்கொலை
பேச்சிப்பாறை கூட்டுறவு சங்க தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
5. கல்லூரி பேராசிரியை மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி குழந்தை உயிரிழந்தது
கல்லூரி பேராசிரியை தனது மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதில் குழந்தை உயிரிழந்தது.