பூங்கா புனரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டு விழா; கலெக்டர் பங்கேற்பு


பூங்கா புனரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டு விழா; கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Feb 2020 3:30 AM IST (Updated: 12 Feb 2020 9:35 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் பூங்கா புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலெக்டர் திவ்யதர்‌ஷினி பங்கேற்றார்.

அரக்கோணம்,

அரக்கோணம் அவுசிங் போர்டு பகுதியில் எம்.ஆர்.எப். தொழிற்சாலையின் பங்களிப்புடன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் பூங்கா புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்‌ஷினி தலைமை தாங்கினார். எம்.ஆர்.எப். தொழிற்சாலை பொது மேலாளர் ஜான்டேனியல், அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜவிஜயகாமராஜ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, பூங்கா புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் அரக்கோணம் நகர அ.தி.மு.க. செயலாளர் பாண்டுரங்கன், அரக்கோணம் ஒன்றிய செயலாளர் பிரகா‌‌ஷ், காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனி உள்பட கட்சி நிர்வாகிகள், நகரசபை அலுவலர்கள், ஊழியர்கள், எம்.ஆர்.எப். தொழிற்சாலை அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story