மாவட்ட செய்திகள்

டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு ; அமைச்சர் வழங்கினார் + "||" + Driver, conductors work Permanent order; Presented by the Minister

டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு ; அமைச்சர் வழங்கினார்

டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு ; அமைச்சர் வழங்கினார்
ஆரணியில் டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு நகல்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
ஆரணி, 

ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமையில் நடந்தது. ஆரணி வருவாய் கோட்டாட்சியர் இல.மைதிலி, தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் சி.கே.ராகவன், துணை பொது மேலாளர்கள் கிரு‌‌ஷ்ணமூர்த்தி (வணிகம்), மணி (தொழில்நுட்பம்), மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி தாசில்தார் தியாகராஜன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, 106 டிரைவர்களுக்கும், 21 கண்டக்டர்களுக்கும் பணி நிரந்தர உத்தரவு நகல்களை வழங்கி பேசினார்.

மேலும் வருவாய்த்துறை சார்பில் 40 பேருக்கு உதவித்தொகைக்கான உத்தரவுகளையும் அமைச்சர் வழங்கினார். விழாவில் மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள்சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மொழுகம்பூண்டி கிராமத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சி பணிகள் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு
மொழுகம்பூண்டி கிராமத்தில் ரூ.2 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
2. பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் ஊராட்சி தலைவர்கள் கேட்க வேண்டும் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேச்சு
பொதுமக்களின் கோரிக்கைகளை ஊராட்சி தலைவர்கள் கனிவுடன் கேட்க வேண்டும் என பயிற்சி முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவுரை வழங்கினார்.
3. சிறப்பு மக்கள் குறைதீர்வு திட்ட முகாமில் 2,127 அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன்கள் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்
முதல் - அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்வு திட்ட முகாமில் 2,127 அங்கன்வாடி மையப்பணியாளர்களுக்கு செல்போன்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
4. திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு விரைவில் புதிய மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு விரைவில் புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை