10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வடமாநில வாலிபர் 13 பேரிடம் போலீசார் விசாரணை


10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வடமாநில வாலிபர்  13 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Feb 2020 3:45 AM IST (Updated: 13 Feb 2020 1:11 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவி. நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து பஸ் மூலம் முள்ளிபாக்கம் கூட்டு சாலையை அடைந்தார். பின்னர் அவர் தனது சொந்த ஊரான பெருந்தண்டலம் கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு மாணவி. நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து பஸ் மூலம் முள்ளிபாக்கம் கூட்டு சாலையை அடைந்தார். பின்னர் அவர் தனது சொந்த ஊரான பெருந்தண்டலம் கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் 10 மாடிகளை கொண்ட 2 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த குடியிருப்பில் வடமாநில தொழிலாளர்கள் 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒரு வாலிபர் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் முள்புதருக்குள் தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வந்ததும் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை தேடினர். இதனால் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கும் அந்த பகுதி பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு குடியிருந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராமு மற்றும் இருவர் தலைமறைவாகிவிட்டனர். இது தொடர்பாக கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் 13 பேரிடம் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story