மாவட்ட செய்திகள்

முழுஅடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் + "||" + Chief Minister Yeddyurappa Request

முழுஅடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்

முழுஅடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்  முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் நடைபெறும் முழு அடைப்பு குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

பரிந்துரைகள்

சில அமைப்புகள் நாளை (அதாவது இன்று) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. நான் கன்னடத்திற்கு ஆதரவாக இருப்பவன். கன்னடர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். சரோஜினி மகிஷி அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில பரிந்துரைகளை நான் ஏற்கனவே அமல்படுத்தியுள்ளேன். மீதமுள்ள பரிந்துரைகளையும் அமல்படுத்த அரசு ஆலோசிக்கும்.

இதுகுறித்து கன்னட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. இன்றே (நேற்று) வேண்டுமானாலும் எனது வீட்டுக்கு வந்து என்னுடன் பேசலாம். அல்லது நாளை (இன்று) அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு வீட்டில் இருக்கிறேன். முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள சங்கங்கள் என்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்.

பொதுமக்களுக்கு தொந்தரவு

அதனால் முழுஅடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும். இத்தகைய போராட்டம் நடத்துவதால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும். காங்கிரஸ் கட்சி இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர்கள் தங்கள் ஆட்சியில் ஏன் அந்த பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை?. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது ஏன்?. அனைவரும் அமர்ந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

முன்னதாக கன்னட கலாசாரம், சுற்றுலா, சிறிய தொழில்கள், மின்சாரம், வனம் மற்றும் சுற்றுச்சூழல், கனிம சுரங்கம் மற்றும் நில அறிவியல் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன், பட்ஜெட் குறித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...