அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது


அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 14 Feb 2020 3:30 AM IST (Updated: 13 Feb 2020 5:33 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களிலும் அம்மா திட்டத்தின் 5–ம் கட்ட சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

நாகர்கோவில், 

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தென்தாமரைகுளம் வருவாய் கிராமத்துக்கு, அங்குள்ள எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும், தோவாளை தாலுகாவில் தோவாளை வருவாய் கிராமத்துக்கு, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கல்குளம் தாலுகாவில் குருந்தன்கோடு ‘ஆ‘ வருவாய் கிராமத்துக்கு கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது.

இதே போல் திருவட்டார் தாலுகாவில் தும்பக்கோடு ‘ஆ‘ வருவாய் கிராமத்துக்கு திருநந்திக்கரை அரசு தொடக்கப்பள்ளியிலும், விளவங்கோடு தாலுகாவில் வெள்ளாங்கோடு வருவாய் கிராமத்துக்கு அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கிள்ளியூர் தாலுகாவில் ஏழுதேசம், ‘சி‘ வருவாய் கிராமத்துக்கு கலிங்கராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. இந்த முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல் போன்ற பொதுவான மனுக்களை பொது மக்கள் அளித்து தீர்வு காணலாம்.

மேற்கண்ட தகவல் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story