குமரியில் 2 இடங்களில் மறியல் போராட்டம்; சி.ஐ.டி.யு. கூட்டத்தில் தீர்மானம்


குமரியில் 2 இடங்களில் மறியல் போராட்டம்; சி.ஐ.டி.யு. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 14 Feb 2020 3:00 AM IST (Updated: 13 Feb 2020 7:21 PM IST)
t-max-icont-min-icon

மார்ச் 6–ந் தேதி குமரியில் 2 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த சி.ஐ.டி.யு. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில், 

குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கமோகன், பொருளாளர் சித்ரா, உழைக்கும் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஐடா ஹெலன், அந்தோணி, ஜாண் சவுந்தர், சோபன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும், பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிராக மத்திய அரசு உத்தரவுப்படி உடனே கமிட்டி அமைக்க வேண்டும், பெண்கள் பணியாற்றும் இடங்களில் ஓய்வு அறை கட்ட வேண்டும் என்று அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மார்ச் 6–ந் தேதி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story