மாவட்ட செய்திகள்

ரே‌ஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்ததாக புகார் + "||" + Supply of substandard rice at the ration shop

ரே‌ஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்ததாக புகார்

ரே‌ஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்ததாக புகார்
பூதப்பாண்டியில் ரே‌ஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்ததாக புகார் செய்யப்பட்டது
பூதப்பாண்டி, 

பூதப்பாண்டி பகுதியில் இரண்டு ரே‌ஷன் கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில் இருந்து அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அரிசி வாங்கினார். அவருக்கு வழங்கப்பட்ட அரிசி கல், தூசுகளுடன் தரமற்ற நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அரிசியுடன் வட்டார வழங்கல் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வட்டார வழங்கல் அலுவலர் நாகேஸ்வரியை சந்தித்து தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்பட்டதாக புகார் செய்தார். 

இதைபார்த்த அலுவலர், ரே‌ஷன் கடை ஊழியரை தொடர்பு கொண்டு வேறு அரிசியை வழங்குமாறு கூறியதோடு, இதுபோன்ற தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் கூறினார். இதையடுத்து அவருக்கு வேறு அரிசி வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ரே‌ஷன் கடைகளில் அதிகாரி ஆய்வு
சேத்துப்பட்டு தாலுகாவில் ரே‌ஷன் கடைகளில் அதிகாரி ஆய்வு செய்தார்.
2. 7 ஆண்டுகளாக திறக்கப்படாத ரே‌ஷன் கடை தாசில்தாரிடம் கிராமத்தினர் மனு
புதிதாக கட்டியுள்ள ரே‌ஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி சாத்தூர் தாசில்தாரிடம் கிராமத்தினர் மனு கொடுத்தனர்.