கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு


கும்மிடிப்பூண்டி அருகே    தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 14 Feb 2020 3:45 AM IST (Updated: 13 Feb 2020 10:48 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது அய்யர்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் வழக்கம் போல முனுசாமி வேலைக்கு சென்றுவிட்டார். குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றபோது வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.

மாலை 6 மணியளவில் முனுசாமியின் தாய் இந்திராணி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

நகை-பணம் திருட்டு

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வந்திருந்த கைரேகை நிபுணர்கள் முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.

Next Story