மாவட்ட செய்திகள்

திருவாரூரில், வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + "||" + Thiruvarur, Breaking the lock of the house 16 Theft of Pound Jewelry

திருவாரூரில், வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருவாரூரில், வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திருவாரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர்,

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய மில்தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது அராபத். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி புஜாசன் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று புஜாசன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று தெரியவந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு நடந்த இடத்தில் இருந்த ரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு நடந்த வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பேரம்பாக்கம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
பேரம்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது.
2. மொடக்குறிச்சி அருகே, பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை
மொடக்குறிச்சி அருகே பட்டப்பகலில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.