மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே ரூ.1 லட்சம் குட்கா சிக்கியது; 2 பேர் கைது + "||" + Rs 1 lakh gutka stuck

கும்மிடிப்பூண்டி அருகே ரூ.1 லட்சம் குட்கா சிக்கியது; 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே  ரூ.1 லட்சம் குட்கா சிக்கியது; 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே போலீசாரின் சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா சிக்கியது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதனையடுத்து காஞ்சீபுரம் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் முனிரத்தினம், ராஜாராம் ஆகியோர் நேற்று கவரைப்பேட்டை பஜாரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த மினி டெம்போவை அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அந்த டெம்போவில் 8 மூட்டைகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா இருப்பதும், இதனை கவரைப்பேட்டை பஜாரில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரிவந்தது.

2 பேர் கைது

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ டிரைவரான பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்த யுவராஜ் (வயது 24) மற்றும் உரிமையாளர் திலகராஜ் (33) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் டெம்போவுடன், குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.