டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப பயிலரங்கம்
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப பயிலரங்கம் நடைபெற்றது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ‘சாக்கோசியம்-2020’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப பயிலரங்கம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். கட்டிடவியல் துறை இணை பேராசிரியர் தனகர் வரவேற்று பேசினார்.
நெல்லை ரிஜினல் கேம்பஸ் டீன் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பயிலரங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதுமையான, செயல்திறன் மிக்க கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில், ஆய்வு கட்டுரைகளை உருவாக்க வேண்டும். மாணவர்கள் நேர்மையுடனும், உண்மையுடனும் செயல்பட்டால் வாழ்வில் சிறந்த நிலையை அடையலாம் என்று கூறினார்.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 100-க்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு பொறியியல் பிரிவிலும் சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,500, 2-வது பரிசாக ரூ.1,500, 3-வது பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது. பயிலரங்கத்தின் ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நினைவு மலர் வெளியிடப்பட்டது. தகவல் தொடர்பியல் துறை துணை பேராசிரியர் மஞ்சித் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story