ஜனவரி மாதத்தில் ஷேர் ஆட்டோ, டாக்சியில் 87,701 பேர் பயணம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்
ஜனவரி மாதத்தில் ஷேர் ஆட்டோ, டாக்சியில் 87,701 பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பல போக்குவரத்து இணைப்பு சேவைகளை வழங்கி வருகிறது.
ஜனவரி மாதத்தில் 43 ஆயிரத்து 745 பயணிகள் ஷேர் டாக்சி மற்றும் ஷேர் ஆட்டோ வசதிகளையும், 29 ஆயிரத்து 425 பயணிகள் மெட்ரோ வேன் இணைப்பு சேவைகளையும், 14 ஆயிரத்து 531 பயணிகள் ‘டெம்போ’ வேன் இணைப்பு சேவையையும் பயன்படுத்தி உள்ளனர்.
அந்தவகையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 87 ஆயிரத்து 701 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை ஷேர் ஆட்டோ, டாக்சி, மெட்ரோ வேன் இணைப்பு மற்றும் டெம்போ வேன் சேவையை 9 லட்சத்து 58 ஆயிரத்து 352 பேர் பயன்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story