மாவட்ட செய்திகள்

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக டிக்கெட் முறைகேடு; 39 பேர் கைது + "||" + IRCTC Via the website Ticket abuse

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக டிக்கெட் முறைகேடு; 39 பேர் கைது

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக  டிக்கெட் முறைகேடு; 39 பேர் கைது
டிராவல் ஏஜென்சி கடை வைத்து ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து அதனை முறைகேடாக அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த 39 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து தெற்கு ரெயில்வேக்கு புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில் தெற்கு ரெயில்வேயில் உள்ள 6 கோட்டத்திலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.

6 கோட்டத்தில் நடந்த சோதனையில் டிராவல் ஏஜென்சி கடை வைத்து டிக்கெட் முன்பதிவு செய்யும் 39 பேர், ஐ.ஆர்.சி.டி.சி இணையத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து, அதனை முறைகேடாக அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 39 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள முன்பதிவு செய்து வைத்திருந்த 218 ரெயில் டிக்கெட்டுகளும், 600 காலாவதியான டிக்கெட்டுகளும், அங்கு இருந்த கம்ப்யூட்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 39 பேரில் 15 பேர் ஐ.ஆர்.சி.டி.சி அனுமதி பெற்ற ஏஜெண்டுகள் என்பதும், மீதமுள்ள 24 பேர் அனுமதி பெறாதவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.