வளர்ச்சி பணிகளுக்கு பூமிபூஜை ராஜவர்மன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
சாத்தூரில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு பூமிபூஜை ராஜவர்மன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
சாத்தூர்,
சாத்தூர் மேலகாந்தி நகரில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான குடிநீர் தட்டுபாட்டை போக்க ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி கட்டவும், அண்ணாநகரில் 14-வது மத்திய நிதி குழு சார்பில் ரூ. 34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை, சாத்தூர் பஸ் நிலையத்தில் 3 லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் சிறிய உயர்மின் கோபுரம் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு பூமிபூஜை ராஜவர்மன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ராஜவர்மன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் குடிநீர் பிரச்சினை இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. விருதுநகர் மாவட்டம் கழுகுமலை, கயத்தார், சாத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் சாத்தூருக்கு குடிநீர் கிடைகிறது.
புதிதாக சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் குடிநீர் திட்டம் முன்னோட்டத்தில் உள்ளது. திட்டம் நடைமுறைக்கு வந்த உடன் சாத்தூர் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு தினமும் குடிநீர் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், நகர செயலாளர் வாசன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், மணிகண்டன், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், சாத்தூர் நகராட்சி பணிகள் மேற்பார்வையாளர் ரமேஷ், பொறியாளர் முத்து மற்றும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story