மாவட்ட செய்திகள்

ஆட்டையாம்பட்டி அருகே, விளையாட்டு வினையானது: நண்பர்களை துப்பாக்கியால் சுட்ட தொழிலாளி கைது + "||" + Game Curious Fired up friends Worker arrested

ஆட்டையாம்பட்டி அருகே, விளையாட்டு வினையானது: நண்பர்களை துப்பாக்கியால் சுட்ட தொழிலாளி கைது

ஆட்டையாம்பட்டி அருகே, விளையாட்டு வினையானது: நண்பர்களை துப்பாக்கியால் சுட்ட தொழிலாளி கைது
ஆட்டையாம்பட்டி அருகே குடிபோதையில் நண்பர்களை விளையாட்டாக ஏர்கன் துப்பாக்கியால் தறித்தொழிலாளி சுட்டார். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். தறித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஆட்டையாம்பட்டி,

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பெரியசீரகாப்பாடி பொதியந் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40), தறிப்பட்டறை வைத்துள்ளார். அவரது தறிப்பட்டறையில் அதே ஊரை சேர்ந்த வெங்கடாசலம்(40), ரமேஷ் (30) ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நண்பர்களாகவும் பழகி வந்தனர்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வாலிபர் ரமேஷ், ஏர்கன் எனப்படும் குருவி சுடும் துப்பாக்கியை எடுத்து வந்தார். அப்போது குடிபோதையில் இருந்த அவர் என்னிடம் துப்பாக்கி இருக்கிறது என முருகனிடமும், வெங்டாசலத்திடமும் கூறினார்.

அப்போது திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கியால் விளையாட்டாக சுட்டார். அதில் இருந்த குண்டு முருகனின் முதுகிலும், வெங்கடாசலத்தின் இடது கால் விரல் பகுதியிலும் பாய்ந்தது. வலி தாங்க முடியாமல் கதறிய இருவரையும் அங்கிருந்தவர்கள், சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில், ஆட்டையாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரியசெல்வம் விசாரணை நடத்தி ரமேசை கைது செய்தார். அவரிடம்இருந்த ஏர் கன்னும் பறிமுதல் செய்யப்பட்டது. ரமேசுக்கு திருமணம் ஆகி மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.

அவரது தாத்தா சுந்தரம் வீட்டில் வசித்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உடைய அவர், அதே பகுதியை சேர்ந்த இன்னொரு ரமேஷ் என்பவரிடம் குருவி சுடுவதற்கு என்று ஏர்கன்னை வாங்கி வந்துள்ளார். ஆனால் அவர் நண்பர்களை மிரட்ட பயன்படுத்திய போது, அதில் இருந்து பால்ரஸ் குண்டு வெளியாகி உள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விளையாட்டு வினையான இந்த சம்பவம் தொடர்பாக இன்னொரு ரமேசிடமும்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.