மந்திரிகள் பங்களாக்களை புதுப்பிக்க கட்டுப்பாடற்ற செலவு பா.ஜனதா குற்றச்சாட்டு


மந்திரிகள் பங்களாக்களை புதுப்பிக்க கட்டுப்பாடற்ற செலவு   பா.ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Feb 2020 3:49 AM IST (Updated: 14 Feb 2020 3:49 AM IST)
t-max-icont-min-icon

மந்திரிகள் பங்களாக்களை புதுப்பிக்க கட்டுப்பாடற்ற செலவு செய்யப்படுவதாக பாரதீய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.

மும்பை, 

பாரதீய ஜனதா தலைவரும், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான பிரவின் தாரேகர் அரசு பங்களாக்களை புதுப்பிக்க கட்டுப்பாடற்ற செலவுகள் மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மந்திரிகளின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு பங்களாக்களை புதுப்பிப்பது குறித்து செய்தி வந்துள்ளது. இதற்கு கட்டுப்பாடற்ற செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற செலவுக்கு எந்த காசோலையும் இல்லை. குறிப்பாக வரும் கோடை காலத்தில் மாநில அரசு கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள உள்ள நிலையில் இது தேவையற்ற செலவு. இந்த செலவினங்களை கட்டுக்குள் வைத்திருக்க வழிகாட்டுதல்கள் அல்லது விதிகளை அரசு வகுக்க வேண்டும்.

திருப்திபடுத்துவதில் மும்முரம்

இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மூத்த தலைவர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்க சில விதிமுறைகள் உள்ளன. ஆனால் மராட்டிய விகாஸ் அகாடி அரசு பாரம்பரியங்களையும், விதிமுறைகளையும் பின்பற்றுவதை விட மந்திரிகளை திருப்திபடுத்துவதில் தான் மிகவும் மும்முரமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story