21-ந்தேதி தொடங்குகிறது: ‘ஈ‌ஷா’ யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா; சிறப்பு பஸ் வசதிகளுக்கு ஏற்பாடு


21-ந்தேதி தொடங்குகிறது: ‘ஈ‌ஷா’ யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா; சிறப்பு பஸ் வசதிகளுக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 14 Feb 2020 5:30 PM IST (Updated: 14 Feb 2020 5:30 PM IST)
t-max-icont-min-icon

ஈ‌ஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை, 

கோவையில் உள்ள ஈ‌ஷா யோகா மையத்தின் 26-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா, வருகிற 21-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா 21-ந்தேதி மாலை 6 மணி முதல் 22-ந்தேதி காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு நடக்கிறது.

தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனாவுடன் விழா தொடங்குகிறது. லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, சக்திவாய்ந்த தியானங்கள், ஜக்கி வாசுதேவின் சத்சங்கம், ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரம்பரியத்தை பறைசாற்றும் இசை-நடன நிகழ்ச்சிகள் விழாவில் அங்கம் வகிக்க இருக்கின்றன.

மகாசிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்ச மணிகள் மற்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்படும். மேலும் அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது. மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல விழா நாட்களில் கோவையில் இருந்து ஈ‌ஷா யோகா மையத்துக்கு சிறப்பு பஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மகா சிவராத்திரி விழாவுக்கு அனுமதி இலவசம் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story