இறுதி பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 10 லட்சத்து 94 ஆயிரம் வாக்காளர்கள்


இறுதி பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 10 லட்சத்து 94 ஆயிரம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 15 Feb 2020 4:00 AM IST (Updated: 14 Feb 2020 6:11 PM IST)
t-max-icont-min-icon

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேனி மாவட்டத்தில் 10 லட்சத்து 94 ஆயிரத்து 227 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தேனி,

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேனி மாவட்டத்தில் 10 லட்சத்து 94 ஆயிரத்து 227 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இறுதி பட்டியல் 

1–1–2020–ந்தேதியை தகுதி நாளாக கொண்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்குமான இறுதி வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டார்.

அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 94 ஆயிரத்து 227 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 5 லட்சத்து 38 ஆயிரத்து 409 பேர். பெண்கள் 5 லட்சத்து 55 ஆயிரத்து 647 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 171 பேர். ஆண்களை விட 17 ஆயிரத்து 238 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

மாவட்டத்தில், ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:–

ஆண்டிப்பட்டி தொகுதி

மொத்த வாக்காளர்கள் – 2,70,303

ஆண்கள் – 1,33,915

பெண்கள் – 1,36,363

மூன்றாம் பாலினம் – 25

பெரியகுளம் (தனி) தொகுதி

மொத்த வாக்காளர்கள் – 2,75,264

ஆண்கள் – 1,35,374

பெண்கள் – 1,39,794

மூன்றாம் பாலினம் – 96

போடி தொகுதி

மொத்த வாக்காளர்கள் – 2,69,515

ஆண்கள் – 1,32,467

பெண்கள் – 1,37,029

மூன்றாம் பாலினம் – 19

கம்பம் தொகுதி

மொத்த வாக்காளர்கள் – 2,79,145

ஆண்கள் – 1,36,653

பெண்கள் – 1,42,461

மூன்றாம் பாலினம் – 31

சிறப்பு சுருக்கத்திருத்தம் 

மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு டிசம்பர் 23–ந்தேதி முதல் கடந்த ஜனவரி 22–ந்தேதி வரை சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்வது தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.

அந்த வகையில் மொத்தம் 32 ஆயிரத்து 879 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 31 ஆயிரத்து 113 மனுக்கள் ஏற்கப்பட்டன. தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இதை பார்வையிட்டு சரியான விவரங்களுடன் தங்களின் பெயர், முகவரி போன்றவை இடம் பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

இறுதி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் சப்–கலெக்டர் சினேகா, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) முத்தையன், தேர்தல் பிரிவு தாசில்தார் ஆர்த்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story