மாவட்ட செய்திகள்

சோழவரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் + "||" + Amma Project Camp at Cholavaram Village

சோழவரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்

சோழவரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்
சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள சோழவரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது.
சேத்துப்பட்டு, 

அம்மா திட்ட முகாமிற்கு சேத்துப்பட்டு தாலுகா மண்டல துணை தாசில்தார் சேகர் தலைமை தாங்கினார். சோழவரம் ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பரம், பெரிய கொழப்பலூர் வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவணியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன் வரவேற்றார்.

முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 52 மனுக்கள் பெறப்பட்டன. இதில் உரிய ஆவணம் உள்ள 24 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், முதியோர் உதவித் தொகை, சிட்டா உள்பட நலத்திட்ட உதவிகளை மண்டல துணை தாசில்தார் சேகர் வழங்கி பேசினார். முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ்குமார், ரகுராமன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.