6 மாதங்களாக சாலையோரம் நிற்கும் சொகுசு கார்


6 மாதங்களாக சாலையோரம் நிற்கும் சொகுசு கார்
x
தினத்தந்தி 15 Feb 2020 3:15 AM IST (Updated: 14 Feb 2020 7:01 PM IST)
t-max-icont-min-icon

குழித்துறை அருகே 6 மாதங்களாக சாலையோரம் நிற்கும் சொகுசு கார் பற்றி போலீசார் விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருங்கல், 

குழித்துறை– தேங்காப்பட்டணம் சாலையில் சென்னித்தோட்டம் பகுதியில் சாலையோரமாக ஒரு சொகுசு கார் கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரை சுற்றிலும் புதர்மண்டி கிடப்பதால் பாதசாரிகள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இந்த பகுதியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இப்பகுதி துர்நாற்றம் வீசி வருகிறது. 

இந்த கார் குறித்து அந்த வழியாக செல்லும் போலீசாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.

 எனவே, இந்த கார் யாருடையது என்று விசாரணை நடத்தி, காரை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story