தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்க ரூ.3.35 கோடியில் புதிய கட்டிடத்துக்கு பூமிபூஜை


தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்க ரூ.3.35 கோடியில் புதிய கட்டிடத்துக்கு பூமிபூஜை
x
தினத்தந்தி 14 Feb 2020 11:00 PM GMT (Updated: 14 Feb 2020 2:24 PM GMT)

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டிடம் ரூ.3.35 கோடியில் கட்டப்பட உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டிடம் ரூ.3.35 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

பூமிபூஜை 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.3.35 கோடி மதிப்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்கள் வைப்பதற்காக சேமிப்பு கட்டிடம் கட்டப்பட உள்ளது. நேற்று காலையில் அந்த பணிக்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசும் போது கூறியதாவது;–

இந்திய தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திட சேமிப்பு கட்டிடம் அமைக்க தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.3.35 கோடி மதிப்பில் 988.90 சதுர மீட்டர் அளவில் புதிய கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.

சேமிப்பு அறை வசதி 

இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் பயிற்சி அறை, அலுவலக அறை, பாதுகாப்பு அறை மற்றும் வாக்குச்சீட்டு அலகு எந்திரம் சேமிப்பு அறை வசதிகளும், முதல் தளத்தில் கட்டுப்பாட்டு பிரிவு எந்திரம் சேமிப்பு அறை மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரம் சேமிப்பு அறை வசதிகளும் செய்யப்பட உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் வைக்க போதுமான அளவில் இந்த கட்டிடம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தேர்தல் தாசில்தார் நம்பிராஜர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர்கள் வெள்ளச்சாமிராஜ், ராமலிங்கம், உதவி பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், வித்யாசாகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story