கிளாம்பாடி பேரூராட்சியில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் தார் சாலை


கிளாம்பாடி பேரூராட்சியில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் தார் சாலை
x
தினத்தந்தி 14 Feb 2020 10:00 PM GMT (Updated: 14 Feb 2020 3:31 PM GMT)

கிளாம்பாடி பேரூராட்சியில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கான பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

ஊஞ்சலூர், 

ஊஞ்சலூர் அருகே கிளாம்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட பாம்பகவுண்டம்பாளையம் காலனியில் இருந்து சத்திரம்புதூர் வரை தார்சாலை அமைத்திட நபார்டு வங்கியில் இருந்து ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டுள் ளது. இதைத்தொடர்ந்து இதற்கான பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி தொகுதி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். இதேபோல் நகர்ப்புற சாலை ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் சோளங்காபாளையம் முதல் சத்திரம்புதூர் வரை ரூ.60லட்சம் மதிப்பீட்டிலும், 14-வது நிதிக்குழு மூலம் பாசூர் மெயின் ரோடு முதல் கிளாம்பாடி பேரூராட்சி அலுவலகம் வரை ரூ.35லட்சம் மதிப்பீட்டிலும் தார்சாலை அமைக்க பணி தொடங்கி வைக்கப்பட்டது. மொத்தம் கிளாம்பாடி பேரூராட்சியில் ரூ.1கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பதற்கான பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கூட்டு்றவு ஒன்றிய தலைவர் புதூர் கலைமணி, கிளாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் அன்னலட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சி.சுப்பிரமணியம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தேவராஜன், ராமலிங்கம், பாசூர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story