மாவட்ட செய்திகள்

ஏரல் அருகே பரிதாபம் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை வேலை கிடைக்காத விரக்தியில் சோகமுடிவு + "||" + Engineer suicide The sadness of not getting a job

ஏரல் அருகே பரிதாபம் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை வேலை கிடைக்காத விரக்தியில் சோகமுடிவு

ஏரல் அருகே பரிதாபம் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை வேலை கிடைக்காத விரக்தியில் சோகமுடிவு
ஏரல் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏரல், 

ஏரல் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

என்ஜினீயர் 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்டாரவிளை வன்னியனூரைச் சேர்ந்தவர் இரட்டை முத்து (வயது 58). இவருடைய மனைவி வாசுகி தேவி. இவர்களுக்கு சரவணகுமார் (27) என்ற மகனும், சரண்யா தேவி என்ற மகளும் இருந்தனர். இவர்கள் 2 பேரும் என்ஜினீயரிங் படித்து விட்டு, பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடி வந்தனர். ஆனாலும் அவர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை.

வேலை கிடைக்காத விரக்தியில் சரவணகுமார் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் சரவணகுமார் குளியல் அறைக்கு சென்று, கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை 

நேற்று காலையில் சரவணகுமார் மாயமானதையும், குளியல் அறை கதவு நீண்ட நேரமாக உள்பக்கமாக பூட்டி இருந்ததையும் அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே குளியல் அறை கதவை உடைத்து திறந்தபோது, அங்கு சரவணகுமார் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த சரவணகுமாரின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. தூக்குப்போட்டு பொதுப்பணித்துறை என்ஜினீயர் தற்கொலை
அரியாங்குப்பத்தில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.