மாவட்ட செய்திகள்

இறுதி பட்டியல் வெளியீடு நெல்லை– தென்காசி மாவட்டத்தில் 26,33,426 வாக்காளர்கள் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் + "||" + 26,33,426 voters outnumber male voters in Tenkasi district

இறுதி பட்டியல் வெளியீடு நெல்லை– தென்காசி மாவட்டத்தில் 26,33,426 வாக்காளர்கள் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

இறுதி பட்டியல் வெளியீடு நெல்லை– தென்காசி மாவட்டத்தில் 26,33,426 வாக்காளர்கள் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்
நெல்லை, தென்காசி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியில் 26 லட்சத்து 33 ஆயிரத்து 426 பேர் இடம் பெற்றுள்ளனர்.
நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியில் 26 லட்சத்து 33 ஆயிரத்து 426 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியில் 

நெல்லை, தென்காசி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷில்பா நேற்று வெளியிட்டார். அதை மாவட்ட அலுவலர் முத்துராமலிங்கம் பெற்று கொண்டார்.

பின்னர் கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின் படி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டு உள்ளது.

சிறப்பு முறை சுருக்க திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் மாதம் 23–ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி 12 லட்சத்து 68 ஆயிரத்து 253 ஆண் வாக்காளர்களும், 13 லட்சத்து 11 ஆயிரத்து 242 பெண் வாக்காளர்களும், 93 இதர வாக்காளர்களும் இருந்தனர். மொத்தம் 25 லட்சத்து 79 ஆயிரத்து 588 பேர் இருந்தனர்.

தொடர்ந்து சுருக்க திருத்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. 1–1–2020–ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியில் பெயர் சேர்க்கப்பட்டது. தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

பெண் வாக்காளர்கள் அதிகம் 

அதன் படி, 12 லட்சத்து 92 ஆயிரத்து 642 ஆண் வாக்காளர்களும், 13 லட்சத்து 40 ஆயிரத்து 652 பெண் வாக்காளர்களும். 132 இதர வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் 26 லட்சத்து 33 426 பேர் உள்ளனர்.,இதில் 18, 19 வயது நிரம்பியவர்கள் 51 ஆயிரத்து 64 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட 48 ஆயிரத்து 70 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

இந்த இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து உதவி கலெக்டர் அலுவலகங்கள் தாலுகா அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஆகியவற்றில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். இரட்டை பதிவு முறையை தவிர்ப்பதற்காக புதிதாக வாக்காளர் வண்ண அடையாள அட்டை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒருவருக்க ஒரு முகவரியில் மட்டும் அடையாள அட்டை கிடைக்கும்.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இதுவரை அரசு சார்பில் 48 அரசு கொள் முதல் நிலையங்கள் உள்ளன. இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்துள்ளது. இதனால் கூடுதலாக விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கூடுதலாக 10 கோள் முதல் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து கட்சி கூட்டம் 

தொடர்ந்து அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நெல்லை உதவி கலெக்டர் மணிஷ்நாரணவரே, சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள். மாவட்ட கலெக்டரிடம் நேர்முக உதவியாளர் சாந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.