மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் சம்பவம்: பள்ளி மாணவி கர்ப்பம்; ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது + "||" + Incident in Pollachi: School Student pregnancy; Auto driver arrested in Bokso

பொள்ளாச்சியில் சம்பவம்: பள்ளி மாணவி கர்ப்பம்; ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

பொள்ளாச்சியில் சம்பவம்: பள்ளி மாணவி கர்ப்பம்; ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது
பொள்ளாச்சியில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவரது மகன் ஷேக்பீர் என்கிற யாசிர் (வயது 20). ஆட்டோ டிரைவர். இவரும் பொள்ளாச்சியை பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும் பள்ளிக்கு செல்லும் போது அந்த மாணவியை தினமும் யாசிர் பார்த்து காதலை வளர்த்து வந்தார். இதற்கிடையில் அந்த மாணவியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அவர் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக அந்த மாணவி கர்ப்பமானார். மருத்துவ பரிசோதனை செய்த பிறகு 4 மாதம் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதையடுத்து தான் கர்ப்பமாக உள்ளதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு யாசிரிடம் அந்த மாணவி கூறியதாக தெரிகிறது.

அதற்கு யாசிர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும், இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் யாசிர் மீது போக்சோ, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதற்கிடையில் தலைமறைவாக இருந்த யாசிரை இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி தலைமையிலான போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வால்பாறை ரோடு ரங்கசமுத்திரம் பஸ் நிறுத்தத்தில் வைத்து யாசிரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில், பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
கோவையில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-