இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: நாகை மாவட்டத்தில் 13 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்களே அதிகம்
நாகை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகை கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரவீன் நாயர் தலைமை தாங்கி பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 785 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து 664 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 461 வாக்காளர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 509 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 483 பெண் வாக்காளர்களும், 18 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 10 வாக்காளர்களும் உள்ளனர்.
பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 794 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 306 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 104 வாக்காளர்களும், நாகை சட்டமன்ற தொகுதியில் 93 ஆயிரத்து 690 ஆண் வாக்காளர்களும், 99 ஆயிரத்து 264 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1 லட்சத்து 92 ஆயிரத்து 961 வாக்காளர்களும், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் 85 ஆயிரத்து 45 ஆண் வாக்காளர்களும், 88 ஆயிரத்து 313 பெண் வாக்காளர்களும், 2 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 360 வாக்காளர்கள் உள்ளனர்.
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 91 ஆயிரத்து 807 ஆண் வாக்காளர்களும், 94 ஆயிரத்து 841 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 86 ஆயித்து 648 வாக்காளர்களும் உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 6 லட்சத்து 42 ஆயிரத்து 630 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 61 ஆயிரத்து 871 பெண் வாக்காளர்களும், 43 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 13 லட்சத்து 4 ஆயிரத்து 544 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story