போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2020 4:30 AM IST (Updated: 15 Feb 2020 12:14 AM IST)
t-max-icont-min-icon

நாகையில், போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் வக்கீல்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வக்கீல்கள் சங்க தலைவர் கார்த்திகே‌‌ஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார். இதில் 30 பெண்கள் உட்பட 160 வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிவரும் வினாயக், விஜயகமலன் ஆகிய 2 பேர் மீது நாகை நகர போலீஸ் நிலையத்தில் இடப்பிரச்சினை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும். பொய் வழக்குப்பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story