இறுதி பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 498 வாக்காளர்கள்


இறுதி பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 498 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 15 Feb 2020 3:45 AM IST (Updated: 15 Feb 2020 2:41 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 498 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்க திருத்தம் 2020-க்கான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணன், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி, நிருபர்களிடம் கூறிய தாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 51 ஆயிரத்து 682 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 63 ஆயிரத்து 731 பெண் வாக்காளர்களும், 85 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 498 வாக்காளர்கள்இடம் பெற்றுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 12 லட்சத்து 78 ஆயிரத்து 598 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி முதல் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி வரை நடைபெற்ற 2020-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது 17 ஆயிரத்து 118 ஆண் வாக்காளர்கள், 20 ஆயிரத்து 316 பெண் வாக்காளர்கள் மற்றும் 37 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 37 ஆயிரத்து 471 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின் போது 260 ஆண் வாக்காளர்கள், 311 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 571 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்து 537 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர பகுதிகளில் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம பகுதிகளில் 824 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 909 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதுடைய இளம் வாக்காளர்களில் 5 ஆயிரத்து 239 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 123 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 367 வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story