சென்னை தடியடி சம்பவத்தை கண்டித்து கோவையில் முஸ்லிம்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் நடைபெற்ற தடியடி சம்பவத்தை கண்டித்து கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவை,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைதிருத்த சட்டத்தைகண்டித்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் போராட்டம் நடத்திய முஸ்லிம் அமைப்புகள் மீதுபோலீசார்தடியடி நடத்தினர்.இந்த சம்பவத்திற்குமுஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும்போலீசாரைகண்டித்து தமிழகம்முழுவதும் முஸ்லிம்கள்சாலைமறியலில்ஈடுபட்டனர். கோவையில்கரும்புக்கடை,ஆத்துப்பாலம்,உக்கடம்,வின்சென்ட் ரோடு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உக்கடம்பகுதியில் திரண்ட முஸ்லிம்கள் அங்கு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டனர். இதேபோல்ஆத்துப்பாலத்தில்ஏராளமானோர்சாலை மறியலில் ஈடுபட்டதால் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
பொள்ளாச்சி காந்தி சிலைக்குஏராளமான முஸ்லிம்கள்ஊர்வலமாக திரண்டுவந்தனர். அப்போது அவர்கள்போலீசாரைகண்டித்தும், குடியுரிமைதிருத்த சட்டத்தைதிரும்பபெறக்கோரியும்கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள்அந்த பகுதியில்சாலைமறியலில்ஈடுபட்டனர். இதேபோல் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.சாலைமறியலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.அசம்பாவிதங்களை தடுக்கபோலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளதாக போலீஸ்அதிகாரி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story