எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் சொல்கிறார்


எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை   பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் சொல்கிறார்
x
தினத்தந்தி 15 Feb 2020 4:30 AM IST (Updated: 15 Feb 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

எந்த கட்சிக்கும் ஆதரவாக நான் செயல்படவில்லை என்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் கூறினார்.

பெங்களூரு, 

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட்டு சட்டவிரோதம் என்று கூறியுள்ளது.. இந்த வழக்கில் தீர்ப்பு விவரம் அடங்கிய நகல் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு பதில் அளிக்கிறேன்.

சில கன்னட அமைப்பினர் என்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேரும்படி கூறுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. நான் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை. பெங்களூருவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அவர்களுக்காக நான் சேவை செய்கிறேன். கன்னடராக பிறந்த நான் கன்னட அமைப்பினரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது எதுவும் இல்லை.

கலாசார காவலர்களாக...

காதலர் தினத்தை கொண்டாடுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். இதனால் கலாசார காவலர் களாக செயல்பட்டு யாரும், யாருக்கும் தொந்தரவு கொடுக்க கூடாது. இதை மீறி நடக்கும் நபர்கள் மீது புகார் அளித்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story