பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


பராமரிப்பு பணி காரணமாக   நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:50 PM GMT (Updated: 14 Feb 2020 10:50 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

மத்திய ரெயில்வேயில் முல்லுண்டு- மாட்டுங்கா இடையே ஸ்லோ வழித்தடத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.58 மணி முதல் பிற்பகல் 3.55 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் முல்லுண்டு- மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். அப்போது இந்த ரெயில்கள் நாகுர், காஞ்சூர்மார்க், வித்யாவிகார் ஆகிய இடங்களில் நிற்காது. பயணிகள் கல்யாண் நோக்கி செல்லும் ஸ்லோ ரெயில்களில் அங்கு செல்ல முடியும்.

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மெயின் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.

சேவை ரத்து

துறைமுக வழித்தடத்தில் நாளை பன்வெல்- வாஷி இடையே காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே காலை 11.06 மணி முதல் மாலை 4.01 மணி வரை பன்வெல், பேலாப்பூரில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு ரெயில் சேவை இருக்காது. இதேபோல காலை 10.03 மணி முதல் பிற்பகல் 3.16 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் இந்த நேரத்தில் சி.எஸ்.எம்.டி.- வாஷி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இதேபோல டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் நாளை காலை 10.12 மணி முதல் பிற்பகல் 3.53 மணி வரை பன்வெலில் இருந்து தானேக்கும், காலை 11.14 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை தானேயில் இருந்து பன்வெலுக்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படாது.

இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story