ஆறுமுகநேரி உபரிநீர் வடிகாலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிபோராட்டம் விவசாயிகள் சங்கம் தீர்மானம்


ஆறுமுகநேரி உபரிநீர் வடிகாலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிபோராட்டம்  விவசாயிகள் சங்கம் தீர்மானம்
x
தினத்தந்தி 16 Feb 2020 4:00 AM IST (Updated: 15 Feb 2020 6:19 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி குளம் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம், ஆறுமுகநேரி காந்தி மைதானத்தில் நடந்தது.

ஆறுமுகநேரி, 

ஆறுமுகநேரி உபரிநீர் வடிகாலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவது என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம் 

ஆறுமுகநேரி குளம் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம், ஆறுமுகநேரி காந்தி மைதானத்தில் நடந்தது. ஆறுமுகநேரி குளம் விவசாயிகள் சங்க தலைவர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

சங்க செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பாலவிநாயகம், துணை தலைவர் லாசர், நலலூர் கீழக்குளம் விவசாயிகள் சங்க செயலாளர் ரவிச்சந்திரன், நத்தகுளம் விவசாயிகள் சங்க தலைவர் ஜெயபாண்டியன், சீனிமாவடிகுளம் விவசாயிகள் சங்க தலைவர் துரை பாண்டியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஆக்கிரமிப்புகள் 

கூட்டத்தில் ஆறுமுகநேரி குளம், நத்தகுளம், சீனிமாவடிகுளம், நல்லூர் கீழக்குளம் ஆகிய குளங்களில் இருந்து செல்லும் உபரிநீர் வடிகால், ஆறுமுகநேரி கடலோர சோதனைச்சாவடி அருகே எட்டுக்கண் பாலம் வழியாக கடலுக்கு செல்கிறது. இந்த உபரிநீர் வடிகாலில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், கால்வாய் சுருங்கி விட்டது. மேலும் இந்த வடிகால், கடலில் சேரும் பொழிமுகத்தில் தனியார் தொழிற்சாலையின் கழிவுகள் கொட்டப்படுவதால், உபரிநீர் கடலுக்கு செல்லாமல் விளைநிலங்களுக்கு திரும்புகின்றன.

எனவே உபரிநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளையும், அதில் கொட்டப்பட்ட தொழிற்சாலை கழிவுகளையும் இந்த மாதத்துக்குள் (பிப்ரவரி) அகற்றி, தூர்வார வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதத்தில் (மார்ச்) விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story