சென்னையில் போலீசார் தடியடியை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகை
சென்னையில் போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தென்காசியில் கலெக்டர் அலுவலகத்தை முஸ்லிம்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
தென்காசி,
சென்னையில் போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தென்காசியில் கலெக்டர் அலுவலகத்தை முஸ்லிம்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தென்காசியில் நேற்று முன்தினம் இரவு முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் பிறகு நேற்று காலை ஆயிரக்கணக்கானோர் தென்காசி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்திற்கு தென்காசி ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் வி.டி.எஸ்.ஆர். முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஐக்கிய ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது தமிழக முதலமைச்சர் துறை ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவிடவேண்டும். சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றை அனுமதிக்கமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
கடையம்
இதேபோல் கடையம் அருகே பொட்டல்புதூரில் உள்ள தீப அலங்கார திடலில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் கடையநல்லூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் தொடர்பாக 400 பேர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story