நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் முற்றுகை போராட்டம் போக்குவரத்து மாற்றம்– போலீஸ் பாதுகாப்பு


நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் முற்றுகை போராட்டம் போக்குவரத்து மாற்றம்– போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 16 Feb 2020 4:00 AM IST (Updated: 15 Feb 2020 9:45 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தைதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தைதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

முற்றுகை போராட்டம் 

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை வண்ணார்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தை கண்டித்தும், இந்த தடியடி சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று நாடு முழுவதும் முற்றுகை போராட்டம் நடந்தது.

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நெல்லை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று மாலையில் நடந்தது. இந்த போராட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மேற்கே உள்ள மெயின்ரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் சாதீக் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் யூசுப் அலி, அப்துல்ரகுமான் பிர்தவுசி ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநில மேலாண்மைக்குழு தலைவர் சுலைமான் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போலீஸ் தடியடியை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் கோ‌ஷங்கள் போட்டனர்.

போராட்டத்தில் மாவட்ட செயலாளர் முகமது நவாஸ், பொருளாளர் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான பெண்கள் தங்கள் கையில் தேசிய கொடியுடன் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து மாற்றம் 

இந்த முற்றுகை போராட்டத்தையொட்டி 2 மணி நேரம் அந்த இடத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். அங்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா. மாநகர துணைபோலீஸ் கமி‌ஷனர் சரவணன், கூடுதல் துணை கமி‌ஷனர் வெள்ளத்துரை ஆகியோர் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Next Story