ஒற்றை மின் விளக்கு திட்டத்தில் அதிக பயன்பாடு: மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை ஊழியர்களுடன் கிராம மக்கள் வாக்குவாதம்
ஒற்றை மின்விளக்கு திட்டத்தில் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்திய மின் இணைப்பை துண்டிக்க சென்ற மின்துறை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஒற்றை மின்விளக்கு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்று வீடுகளில் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து பொதுமக்களிடம் வழக்கமான மின் மீட்டர் திட்டத்திற்கு மாறும்படி மின்துறை அறிவுறுத்தியது. அத்துடன் சம்பந்தப்பட்ட வீடுகளில் மின் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், மின்துறைக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது.
திரு-பட்டினம் கீழையூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மின் மீட்டர் திட்டத்தில் சேராதவர்களின் வீடுகளை கணக்கெடுத்து மின் இணைப்பை துண்டிக்க முயன்றனர்.
இதனை அறிந்த ஒற்றை மின்விளக்கு திட்டத்தில் மின் இணைப்பு பெற்ற கிராம மக்கள் மின் துண்டிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இது பற்றி தகவல் அறிந்த திரு-பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story