மனைவியை குடும்பம் நடத்தவர அழைத்தபோது தகராறு மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகன்


மனைவியை குடும்பம் நடத்தவர அழைத்தபோது தகராறு மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகன்
x
தினத்தந்தி 17 Feb 2020 4:00 AM IST (Updated: 17 Feb 2020 1:09 AM IST)
t-max-icont-min-icon

தனது காதல் மனைவியை குடும்பம் நடத்த வரும்படி அழைத்தபோது ஏற்பட்ட தகராறில் மாமியாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 3-வது தெருவைச் சேர்ந்தவர் பாத்திமா(வயது 48). இவருடைய மகள் நிஷா. இவர், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் நிஷா, தனது கணவர் சீனிவாசனிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். நேற்று சீனிவாசன், மாமியார் வீட்டுக்கு சென்றார். தனது காதல் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார்.

அப்போது சீனிவாசனுக்கும், அவருடைய மாமியார் பாத்திமாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், சமையல் அறையில் இருந்த கத்தியால் மாமியாரின் தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் காயம் அடைந்த பாத்திமா, வலியால் அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மருமகன் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

Next Story