சென்னகுப்பம் ஊராட்சியில் புதர் மண்டி காணப்படும் கிளைநூலகம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


சென்னகுப்பம் ஊராட்சியில் புதர் மண்டி காணப்படும் கிளைநூலகம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Feb 2020 4:15 AM IST (Updated: 17 Feb 2020 2:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னகுப்பம் ஊராட்சியில் கிளைநூலகம் புதர் மண்டி காணப்படுகிறது. அதை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் சென்னகுப்பம் ஊராட்சியில் தமிழக அரசின் பொது நூலகத்துறையின் கீழ் மாவட்ட கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்த பகுதியை சுற்றியுள்ள எழிச்சூர், வடக்குபட்டு, வைப்பூர், வட்டம்பாக்கம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வரும் வெளி மாநிலத்தவர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நூலகத்தில் நிரந்தர உறுப்பினர்கள், நீண்ட கால உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

அனைவரும் நூலகத்திற்கு வந்து படித்து பயனடைந்து செல்கின்றனர். இந்த நிலையில் நூலகம் உள்ள பகுதியில் புதர் மண்டி குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் நூலகத்திற்கு வரக்கூடியவர்கள் பூச்சிகள், வண்டுகள், கொசுக்கடியால் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் நூலகத்திற்கு செல்லும் பாதை சீரமைக்கப்படாததால் முதியவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதனால் நூலகத்திற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எனவே புதர்கள் நிறைந்து காணப்படும் நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story