சென்னையில் போலீஸ் தடியடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த கல்லூரி மாணவர்கள் 100 பேர் மீது வழக்கு


சென்னையில் போலீஸ் தடியடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த கல்லூரி மாணவர்கள் 100 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 Feb 2020 4:15 AM IST (Updated: 17 Feb 2020 2:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போலீஸ் தடியடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த கல்லூரி மாணவர்கள் 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வண்டலூர்,

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதனை கண்டித்து கடந்த 14-ந் தேதி வண்டலூர் பூங்கா அருகில் உள்ள கிரசன்ட் கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஜி.எஸ்.டி. சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதனால் சென்னை திருச்சி-தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து நேற்று முன்தினம் வண்டலூர் கிராம நிர்வாக அதிகாரி ஓட்டேரி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கிரசன்ட் கல்லூரி மாணவர்கள் 100 பேர் மீது ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story