தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
செய்யாறில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 23–ந் தேதி நடக்கிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் கல்வி தகுதிகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் நோக்குடன் தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் 23–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 40–க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
முகாமில் 8–ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்வி தகுதியுடையவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமன்று தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்–4, ரேஷன் அட்டை, சாதி சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.ncs.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி 04175 233381 எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story