ஹலோ எப்.எம். 91.5 சார்பில் ‘எங்க வீட்டு ஜீனியஸ்’; மாணவ- மாணவிகளுக்கான போட்டி


ஹலோ எப்.எம். 91.5 சார்பில் ‘எங்க வீட்டு ஜீனியஸ்’; மாணவ- மாணவிகளுக்கான போட்டி
x
தினத்தந்தி 18 Feb 2020 4:00 AM IST (Updated: 17 Feb 2020 9:32 PM IST)
t-max-icont-min-icon

ஹலோ எப்.எம். 91.5 சார்பில் ‘எங்கவீட்டு ஜீனியஸ்’ என்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வென்றனர்.

வேலூர், 

ஹலோ எப்.எம். 91.5 சார்பில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்று பரிசுகளை வெல்லும் போட்டிகளை ‘எங்க வீட்டு ஜீனியஸ்’ என்ற பெயரில் வேலூரை அடுத்த ஸ்ரீ புரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி பள்ளியில் நடத்தப்பட்டது.

போட்டிகளை காஞ்சீபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் அதிபர் சுந்தர் கணேஷ், கோல்டு வின்னர் வேலூர் சேல்ஸ் சீனியர் மேனேஜர் கோபி கிருஷ்ணன் மற்றும் அருண், ஸ்ரீபுரம் நாராயணி பள்ளிகள் சி.இ.ஓ. முரளிதரன் மற்றும் தலைமை நிர்வாகி ஆதிகேசவன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவ- மாணவிகள் ஓவியம், நடனம், பாட்டு, பேச்சு மற்றும் வில் வித்தை, சிலம்பம், ரோபாட்டிக் போன்ற திறமைகளை வெளிப்படுத்தி பெற்றோர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்தனர்.

செல்போன் மற்றும் தொலைக்காட்சிகளில் மூழ்கி கிடப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்தும், வெயிலின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக வெயிலோடு விளையாடுவோம் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் பெற்றோரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கோல்டு வின்னர் ‘சன் பன்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியும், பெற்றோர்-குழந்தைகளிடையிலான புரிதலை வெளிப்படுத்தும் வகையில் எல்டியா எண்ணெய் நடத்திய ‘நம் பந்தம்’ போட்டியும் நடைபெற்றது.

மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில், 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான பிரிவில் கவினா, பிரணவி, ரோஹித் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். 4-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரையிலான பிரிவில் பிரதீப், ஜனனி ஸ்ரீ, தஸ்வந்த் ராம் ஆகியோரும், 7-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கான பிரிவில் நிரஞ்சனா, சக்தி சாதனா, துளசி ஆகியோரும் வெற்றி பெற்றனர். முதல் இடத்தை பிடித்த 3 பேருக்கு மிக்ஸ்சர் கிரைண்டர், 2-ம் பரிசாக 3 பேருக்கு ஜூசர், 3-வது பரிசாக 3 பேருக்கு எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் பரிசாக வழங்கப்பட்டது.

பாட்டு, நடனம், தனித்திறமை, சன் பன், நம் பந்தம் போட்டிகளில் வெற்றிபெற்ற 48 பேருக்கு எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், கிச்சன் செட், அயர்ன் பாக்ஸ் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.

Next Story