ராதாபுரம் அருகே கடற்கரை கிராமங்களில் மீனவர்களுக்கு பாய்மர படகு போட்டி: முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு


ராதாபுரம் அருகே கடற்கரை கிராமங்களில் மீனவர்களுக்கு பாய்மர படகு போட்டி: முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு
x
தினத்தந்தி 18 Feb 2020 3:00 AM IST (Updated: 18 Feb 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் அருகே உள்ள கடற்கரை கிராமங்களில் மீனவர்களுக்கான பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இதில் முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

வடக்கன்குளம், 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கடற்கரை கிராமங்களான கூட்டப்புளி, கூடுதாழை, பெருமணல், இடிந்தகரை உள்பட 10 கிராமங்களில் ஆண்டுதோறும் மீனவர்களின் பாரம்பரியமிக்க பாய்மர படகு போட்டி நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான பாய்மர படகு போட்டி கூட்டப்புளியில் நடைபெற்றது.

அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை ரஞ்சித்குமார் போட்டியை தொடங்கி வைத்தார். பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானக்கண் முன்னிலை வகித்தார். போட்டியில் படகு ஒன்றுக்கு 9 மீனவர்கள் வீதம் 11 பாய்மர படகு மீனவர் அணியினர் கலந்துகொண்டனர்.

இதில் முதலிடம் பிடித்த ரோபி அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. சேவியர் அணி 2-வது இடத்தையும், வினோத் அணி 3-வது இடத்தையும், அஜித் அணி 4-வது இடத்தையும் பிடித்தது. இந்த அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் பெருமணலில் நடந்த படகு போட்டியை கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 12 அணிகள் கலந்துகொண்டன. இதில் முதலிடம் பிடித்த சவரிமுத்து அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. அச்சிட்டு அணி 2-வது இடத்தையும், திலீப் அணி 3-வது இடத்தையும், மார்ட்டின் அணி 4-வது இடத்தையும் பிடித்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி பரிசுகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கிராம மீனவர்கள் செய்திருந்தனர்.

Next Story