கம்பளா போட்டியில் சாதனை படைத்த வீரர் சீனிவாச கவுடாவுக்கு ரூ.3 லட்சம் பரிசு முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் பாராட்டு


கம்பளா போட்டியில் சாதனை படைத்த   வீரர் சீனிவாச கவுடாவுக்கு ரூ.3 லட்சம் பரிசு   முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் பாராட்டு
x
தினத்தந்தி 18 Feb 2020 5:08 AM IST (Updated: 18 Feb 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

கம்பளா போட்டியில் சாதனைபடைத்த வீரர் சீனிவாசகவுடாவுக்கு ரூ.3 லட்சம் பரிசை முதல்-மந்திரி எடியூரப்பா வழங்கி நேரில் பாராட்டினார்.

பெங்களூரு, 

உடுப்பியில் நடைபெற்ற கம்பளா போட்டியில் சீனிவாச கவுடா, இருபுறமும் மாடுகளை கட்டியபடி சேற்றில் 145 மீட்டர் இலக்கை மிக குறைந்த அதாவது 13.61 வினாடியில் அடைந்து முதல் பரிசை பெற்றார். அவரது இந்த வேகம், ஒலிம்பிக்கில் ஓட்ட பந்தயத்தில் பதக்கங்களை குவித்த உசேன் போல்ட்டின் வேகத்தையும் மிஞ்சிவிட்டதாக பேசப்படுகிறது.

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் அவரை பங்கேற்க வைக்க பயிற்சி வழங்க மத்திய அரசு ஏற்பாடு ெசய்துள்ளது. இந்த சாதனை மூலம் அவர் ஒரே நாளில் கர்நாடகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் புகழ் பெற்றார். இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா, சீனிவாசகவுடாவை பெங்களூருவுக்கு அழைத்து பாராட்டினார். பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் விருந்தினர் அரங்கத்தில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.

மைசூரு தலைப்பாகை

இதில் சீனிவாசகவுடாவுக்கு எடியூரப்பா மைசூரு தலைப்பாகை, சால்வை அணிவித்து கவுரவித்தார். அப்போது அவருக்கு கர்நாடக அரசு சார்பில் ரூ.3 லட்சத்திற்கான காசோலை அடங்கிய கவர் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த கவரில் காசோலை இல்லை என்ற தகவல் பிறகு தெரியவந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Next Story