மாநகராட்சி ஆணையாளரிடம் வியாபாரிகள் மனு நெல்லை புதிய பஸ்நிலையத்தில் தடுப்பு வேலியை அகற்ற வேண்டும்


மாநகராட்சி ஆணையாளரிடம் வியாபாரிகள் மனு நெல்லை புதிய பஸ்நிலையத்தில் தடுப்பு வேலியை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 19 Feb 2020 4:00 AM IST (Updated: 18 Feb 2020 6:29 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் தடுப்பு வேலியை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

நெல்லை, 

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் தடுப்பு வேலியை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

ஆணையாளரிடம் மனு 

நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது நெல்லை வேய்ந்தான்குளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். புதிய பஸ்நிலைய கடை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் ஆணையாளரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

தடுப்பு வேலி 

நாங்கள் புதிய பஸ்நிலையத்தின் முகப்பு பகுதியில் மாநகராட்சி கடைகளில் வியாபாரம் செய்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் சார்பில், எங்கள் கடைகளுக்கு பயணிகள் வரக்கூடிய வழியை தடுப்பு வேலி அமைத்து தடுத்து விட்டனர். இதனால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக பஸ் நிலையத்துக்குள் பயணிகள் வரமுடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே வியாபாரிகள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பிலும் தடுப்பு வேலியை அகற்றக்கோரி வலியுறுத்தி வருகிறோம். எனவே புதிய பஸ்நிலையத்தில் நிலவும் சூழ்நிலை, தடுப்பு வேலியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட வேண்டும். உடனடியாக தடுப்பு வேலியை அகற்றி பயணிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உரிய போக்குவரத்து வசதியை செய்து தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆணையாளரிடம் வழங்கினார்கள்.

Next Story