நெல்லையில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2020 4:00 AM IST (Updated: 18 Feb 2020 6:48 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கம்யூனிஸ்டு கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை, 

நெல்லையில் கம்யூனிஸ்டு கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் 

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன் வரவேற்று பேசினார்.

எல்.ஐ.சி., ரெயில்வே, ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், வங்கிகள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொதுத்துறை நிறுவனங்கள் 

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் பேசும் போது, “பா.ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக லாபத்தில் இயங்கும் எல்.ஐ.சி. நிறுவனத்தை தனியார் மயம் ஆக்கப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே துறை என்பது சேவை துறை. அதையும் தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலை நீடித்தால் அனைத்து தரப்பு மக்களும் போராட வேண்டிய நிலை ஏற்படும்“ என்றார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த வி.பழனி, சுடலைராஜ், வரகுணன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், சடையப்பன், சுந்தர்ராஜ், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story