தூத்துக்குடிக்கு முதல்–அமைச்சர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு


தூத்துக்குடிக்கு முதல்–அமைச்சர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 19 Feb 2020 4:30 AM IST (Updated: 18 Feb 2020 7:24 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

முதல்–அமைச்சர் வருகை 

திருச்செந்தூரில் அமைக்கப்பட்டு உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22–ந்தேதி (சனிக்கிழமை) திறந்து வைக்கிறார்.

அதேபோன்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள இருதய நோய் சிறப்பு பிரிவு, சிறுநீரக டயாலிசிஸ் பிரிவு உள்ளிட்ட பணிகளை தொடங்கிவைத்து பார்வையிட உள்ளார்.

தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு 

இந்த நிலையில் தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் ஆகியோர் முதல்–அமைச்சர் விழா நடைபெறும் பகுதிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவர்கள், அங்கு இருதய நோய் சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு அருகே விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலஸ்ஜெயமணி, உதவி மருத்துவ அலுவலர் ஜெயபாண்டியன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story